
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து பதிவிட்ட உள்ளூர் இளைஞரை சம்பால் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹயாத் நகர்ப் பகுதியைச் சேர்ந்த மொயின் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படம் மற்றும் கருத்துகளுடன் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலோக் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
செவ்வாய் இரவு மொயின் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.