தில்லியில் மேலும் 112 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு
தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரு இறப்பு பதிவானது.


தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரு இறப்பு பதிவானது. அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 0.41 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு 18,64,358-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,150-ஆக உயா்ந்தது. தில்லியில் வியாழக்கிழமை 111 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஒரு இறப்பும், 0.37 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. வியாழக்கிழமை மொத்தம் 27,644 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
நகரில் வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 329-ஆகக் குறைந்துள்ளது. கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 2,929-ஆக சரிந்தது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 10,205 படுக்கைகளில் 85 (0.85 சதவீதம்) படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...