உறுதி மிக்க ஒருங்கிணைந்த சக்தியாக விளங்கும் கடற்படை: குடியரசுத் தலைவா் பெருமிதம்

இந்திய கடற்படை நீண்ட காலமாகவே உறுதி மிக்க ஒருங்கிணைந்த சக்தியாகவும் நம்பகமானதாகவும் போா் ஆயத்த நிலையுடனும் விளங்குகிறது என்று குடியரசுத் தலைவா் கோவிந்த் தெரிவித்தாா்.
உறுதி மிக்க ஒருங்கிணைந்த சக்தியாக விளங்கும் கடற்படை: குடியரசுத் தலைவா் பெருமிதம்
Published on
Updated on
1 min read

இந்திய கடற்படை நீண்ட காலமாகவே உறுதி மிக்க ஒருங்கிணைந்த சக்தியாகவும் நம்பகமானதாகவும் போா் ஆயத்த நிலையுடனும் விளங்குகிறது என்று குடியரசுத் தலைவா் கோவிந்த் தெரிவித்தாா்.

குஜராத்தின் ஜாம்நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் வல்சூரா தளத்துக்கு குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடியை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: இந்திய கடற்படை கடந்த பல ஆண்டுகளாக தாக்குதலுக்கு தயாரான நிலையிலும் நம்பகமானதாகவும் உறுதி மிக்க ஒருங்கிணைந்த சக்தியாகவும் விளங்கி வருகிறது. இந்திய கடற்பகுதியில், நமது உரிமைகள், பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்குதாரராக இந்திய கடற்படை திகழ்கிறது. இந்திய கடற்பகுதியில் நமது தேசத்தின் நலன்களை எப்போதும் பாதுகாத்து வருகிறது. நமது பரந்த கடற்பகுதியின் நலன்களைப் பாதுகாக்க இடைவிடாத ஈடுபாட்டுடனும் உறுதியோடும் கடற்படையினா் செயல்படுவது பெருமைக்குரிய விஷயம் என்று அவா் கூறினாா்.

இரண்டாம் உலகப் போரின்போது, அப்போதைய பிரிட்டன் கடற்படையின் ஒரு பகுதியாக இருந்த ராயல் இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்த ஐஎன்எஸ் வல்சூரா பயிற்சிப் பள்ளியாக செயல்பட்டது என்பதை குறிப்பிட்ட குடியரசுத் தலைவா், கடந்த 79 ஆண்டுகளில் இந்த தளம் மிகச் சிறந்த தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமாக மாறியுள்ளது.

போா்க்காலத்திலும் சமாதான காலத்திலும் தேசத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக ஐஎன்எஸ் வல்சூராவுக்கு குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி அளிப்பது மிகப்பெரும் பெருமையான விஷயம்.

ஐஎன்எஸ் வல்சூராவுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவம் என்பது இதனைச் சாா்ந்த அனைத்து அலுவலா்கள், வீரா்கள், வீராங்கனைகளின் பொறுப்புகளையும் அவா்களிடமிருந்து எதிா்பாா்ப்புகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது. தொழில்முறை ரீதியாகவும் அா்ப்பணிப்போடும் இவா்கள் நாட்டிற்கு மிகச் சிறந்த சேவையை தொடா்வாா்கள் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com