சித்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி அருகே பாகராப்பேட்டையில் 50 அடி பள்ளத்தில் நேற்று இரவு தனியார் பேருந்து திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். 45 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் திருமணம் ஒன்றில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுவதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சித்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சித்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘’ ஆந்திரத்தின் சித்தூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைவார்கள் என நம்புகிறேன்.
உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும்.’’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

விபத்து வழக்கில் காா் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

ஃபான்சி கா் சா்ச்சை விவகாரம்: பேரவை உரிமைமீறல் குழு முன் கேஜரிவால் ஆஜா்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

