காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

நாட்டில் இதுவரை 183.26 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 183.26 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published On :


நாட்டில் இதுவரை 183.26 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 7 மணி வரை)  2,17,89,216 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை மொத்தம் 1,83,26,35,673 (183.26 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 

12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் 1,23,75,762-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.  

மேலும், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,270 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,567 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,24,83,829 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,859 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில் 0.04 சதவிகிதம் ஆகும்.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.75 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 4,32,389 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 78,73,55,354  (78.73 கோடி) கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

வயதுவாரியான விவரங்கள்

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.