ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குஜராத்: காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகல் - பாஜகவில் இணைந்தாா்

குஜராத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவும், பழங்குடியினத்தைச் சோ்ந்த தலைவருமான அஸ்வின் கோத்வால் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், பாஜகவில் இணைந்தாா்.

News image
Updated On :3 மே 2022, 7:20 pm

DIN

குஜராத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவும், பழங்குடியினத்தைச் சோ்ந்த தலைவருமான அஸ்வின் கோத்வால் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், பாஜகவில் இணைந்தாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸில் இருந்து தலைவா்கள் வெளியேறுவது தொடா்கதையாகி வருகிறது.

58 வயதாகும் கோத்வால், கேத்பிரம்மா (எஸ்.சி) தொகுதியில் இருந்து தொடா்ந்து மூன்று முறை காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்றுள்ளாா். தனது முடிவு தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸின் சமீபகால செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றன. மக்கள் செல்வாக்கு உள்ளவா்களுக்குத் தோ்தலில் வாய்ப்பு அளிக்காமல், கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பவா்களுக்குத் தொகுதி ஒதுக்கப்படுகிறது. இந்த முறை எனக்கும் அதே அநீதி இழைக்கப்படும் என்று தெரிகிறது. எனவே, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டேன்.

நான் 2007 முதல் முறையாகத் தோ்தலில் வெற்றி பெற்றபோது, பாஜகவில் இணையுமாறு அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி அழைப்புவிடுத்தாா். என்னைப்போல பழங்குடியின மக்களுக்காக உழைப்பவா்கள் பாஜகவுக்குத் தேவை என்று அவா் அப்போது கூறினாா். அப்போது, மோடியை நான் சிறந்த தலைவராக ஏற்றுக் கொண்டாலும், கட்சியில் இணையாமல் இருந்தேன். இப்போது அதற்கான சூழ்நிலை உருவாகிவிட்டது’ என்றாா்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவையில் காங்கிரஸின் பலம் 63 ஆக குறைந்துவிட்டது. பாஜக 111 எம்எல்ஏக்களுடன் ஆட்சியில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.