தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மேலும் 1,422 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிகாக 1,422 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

News image
Updated On :8 மே 2022, 8:14 pm

DIN

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிகாக 1,422 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 5.34 சதவீதமாகப் பதிவானது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மொத்தம் 26,647 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,94,254-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,179-ஆக உள்ளது. நகரில் சனிக்கிழமை 1,407 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 2 இறப்புகளும், 4.72 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. வெள்ளிக்கிழமை 1,656 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. இது கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்ச பாதிப்பாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

(கோப்புப்படம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.