தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தேர்வில் ஹிந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் இடையேயான ஒற்றுமை குறித்து கேள்வி

பிரபல தனியார் பல்கலைக்கழகமான சாரதா பல்கலையில் தேர்வில் ஹிந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன என கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையான நிலையில் அதற்கு அறிக்கை சமர்பிக்குமாறு யுஜிசி

News image
Updated On :10 மே 2022, 6:29 am

பிரபல தனியார் பல்கலைக்கழகமான சாரதா பல்கலையில் தேர்வில் ஹிந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன எனக் கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையான நிலையில் அதற்கு அறிக்கை சமர்பிக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள சாரதா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் முதலாமாண்டு அரசறிவியல்(பொலிட்டிகல் சயின்ஸ்) மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் ஹிந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் இடையேயான ஒற்றுமைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பியதால் பெரிய சர்ச்சை உருவானது.

இந்நிலையில், தற்போது இதனை உறுதிப்படுத்திய பின்பு எதற்காக இப்படியான கேள்வி கேட்கப்பட்டது என சாரதா பல்கலைக்கழகத்திடம் யுஜிசி(பல்கலை மானியக் குழு) விளக்க அறிக்கையை கேட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.