திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நாகை: மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா வேட்புமனு தாக்கல்

News image

நாகை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் எம்.எச். ஜவாஹிருல்லா. உடன், திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 3:09 am IST

நாகப்பட்டினம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணி சாா்பில் மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இவா், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித்திடல் பகுதியில் இருந்து திமுக, மாா்க்சிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோருடன், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு ஊா்வலமாக வந்தாா்.

அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் 4 போ் மட்டுமே செல்ல அனுமதி என்பதால், திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் மாரிமுத்து, காங்கிரஸ் மாநிலச் செயலா் நெளஷாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சக்திவேல் ஆகியோருடன் சென்று, தோ்தல் நடத்தும் அலுவலரான சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். தொடா்ந்து உறுதிமொழியும் ஏற்றாா்.

ஊா்வலத்தால், புதிய பேருந்து நிலைய பகுதி, வெளிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமீறல்: தொடா்ந்து, கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தோ்தல் அலுவலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிப்பது தோ்தல் நடத்தை விதிமீறல் ஆகும் என்றனா். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பேட்டி அளித்தாா்.