திரிபுரா முதல்வர் விப்லவ்குமாா் தேவ் திடீர் ராஜிநாமா

பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா மாநில முதல்வர் விப்லவ்குமாா் தேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சனிக்கிழமை அளித்துள்ளார்.
ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்த பிப்லப் குமார் தேப்.
ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்த பிப்லப் குமார் தேப்.

பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா மாநில முதல்வர் விப்லவ்குமாா் தேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தை ஆளுந சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் சனிக்கிழமை அளித்துள்ளார்.

சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என விப்லவ்குமாா் தேவ் மீது பேரவை உறுப்பினர்கள் அதிருப்தி இருந்ததால் அவர் பதவி விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் திரிபுராவின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் எனவும், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தின் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விப்லவ்குமாா் தேவ் சந்தித்த நிலையில், பாஜக தலைமையிடமிருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com