மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை: காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அவரின் மகன் காா்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது,

News image
Updated On :17 மே 2022, 8:40 pm

DIN

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அவரின் மகன் காா்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது, மற்ற முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை என்று அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த செய்தித் தொடா்பாளா் அஜய் மாக்கன் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சிபிஐ-யின் சோதனை நடவடிக்கை தவறானது. ப.சிதம்பரத்துக்கு கட்சி முழு ஆதரவளிக்கிறது. பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்காக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றாா்.

கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா கூறுகையில், ‘‘நாட்டுப்பற்று மிக்க ப.சிதம்பரம் நாட்டுக்கு அளித்துள்ள பங்களிப்பைக் கேள்வி எழுப்ப முடியாது. முன்னாள் உள்துறை, நிதித் துறை அமைச்சா் மீது சிபிஐ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, தாழ்ந்த அரசியலை வெளிக்காட்டுகிறது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.