மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தில்லி: ரோகிணி நீதிமன்றத்தில் தீ விபத்து

தில்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறைக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :18 மே 2022, 8:06 am

DIN

தில்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறைக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தில்லி தீயணைப்பு சேவையின் இயக்குனர் அதுல் கர்க் கூறுகையில், 

ரோகிணி நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள நீதிமன்ற அறை 210இல் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறைக்கு இன்று காலை அழைப்பு வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

நீதிபதிகள் அறைக்கு அருகில் உள்ள ஏசியில் தீப்பிடித்துள்ளதாக அவர் கூறினார். 

வடக்கு தில்லி வழக்குரைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நீதிமன்ற வளாகத்தில் அடிக்கடி இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், மனுதாரர்கள் உள்பட வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகள் நீதிமன்றங்களுக்கு செல்லும் அனைவருக்கும் ஒருவித அச்சம் ஏற்படுகிறது. 

இந்த சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் கேள்விக்குறியாகி உள்ளது.

ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றமும் அதன் சொந்த பராமரிப்புக் குழுவைக் கொண்டுள்ளது. அனைத்து உபகரணங்களும் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்கும் பொறுப்பு தீயணைப்புத் துறைக்கு தான் உள்ளது.

நீதிமன்ற வளாகங்களில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகள், நீதிமன்றங்களில் தீ பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அதை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்று வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலாளர் வினீத் ஜிண்டால் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.