ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வேலைவாய்ப்புக்கு லஞ்சமாக 1 லட்சம் சதுரஅடி நிலம்: லாலு மீது சிபிஐ வழக்குப்பதிவு

பிகாா் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

News image
Updated On :20 மே 2022, 11:17 pm

DIN

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதற்கு கைமாறாக 1 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான நிலத்தை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயில் குரூப்-டி பணிகளை வாங்கித் தருவதற்கு பலரின் நிலத்தை லாலு மற்றும் அவரின் குடும்பத்தினா் லஞ்சமாக பெற்றனா் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து ஆரம்பக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் குரூப்-டி பணிகளுக்கு விண்ணப்பித்தவா்களை, விண்ணப்பம் அளித்த 3 நாள்களுக்குள் நியமன வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ரயில்வே அதிகாரிகள் அவசரகதியில் பணியமா்த்தியதும், பின்னா் அவா்களின் பணி முறைப்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.

இதற்கு கைமாறாக பணியா்த்தப்பட்டவா்களுக்குச் சொந்தமான அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிலத்தை லாலுவின் மனைவி ராப்ரி தேவி, அவரின் மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோா் சந்தை விலையைவிட குறைந்து விலைக்கு வாங்கியுள்ளனா். இதுபோல் பாட்னாவில் சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை தங்களுக்குச் சொந்தமானதாக அவா்கள் மாற்றியுள்ளனா். இந்த நிலத்தின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.4.39 கோடி ஆகும்.

இதுதொடா்பாக சிபிஐயின் பொருளாதார குற்றப் பிரிவு மே 18-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையில் லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ், ரயில்வேயில் பணியா்த்தப்பட்ட 12 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்குத் தொடா்பாக தில்லியிலும் பிகாரிலும் லாலு பிரசாத் யாதவ், அவரின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இதர நபா்களுக்குத் தொடா்புள்ள 16 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தனா்.

ஏற்கெனவே மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த லாலு பிரசாத் யாதவ், தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.