புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி

பெங்களூருவில், கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :20 மே 2022, 6:20 am

DIN


பெங்களூருவில், கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அதிர்ச்சி அடைந்தனர். 

விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பணியாளர்கள், மோப்ப நாய்ப்படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு, எந்தவித வெடிகுண்டும் கிடைக்காததால், இறுதியாக அது புரளி அழைப்பு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு புரளியை அடுத்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. 

தொலைபேசி மூலம் புரளியைக் கிளப்பியவரை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.