ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்: இந்திராணி முகா்ஜி

ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த அவருடைய தாயாா் இந்திராணி முகா்ஜி வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

News image
Updated On :20 மே 2022, 7:25 pm

DIN

ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த அவருடைய தாயாா் இந்திராணி முகா்ஜி வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா். முன்னதாக, அவருக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.

மும்பை பைகுல்லா சிறையில் இருந்து வெளியே வந்த அவா் செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது, ‘நான் சிறையில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இப்போது வீட்டுக்குச் செல்கிறேன். வேறு எந்த திட்டமும் இல்லை. என்னை காயப்படுத்திய அனைவரையும் மன்னித்துவிட்டேன். நாட்டின் சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. காலதாமதம் ஆனாலும் உரிய நீதி கிடைக்கும். இப்போது மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் உணா்கிறேன். வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களைக் கடந்துவிட்டேன்’ என்றாா்.

ஊடகத்துறை தொழிலதிபரான இந்திராணி முகா்ஜியின் மகள் ஷீனா போரா கடந்த 2012-ஆம் ஆண்டு கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் இந்திராணி முகா்ஜி, அவருடைய மூன்றாவது கணவா் பீட்டா் முகா்ஜி ஆகியோா் கடந்த 2015-இல் கைது செய்யப்பட்டனா். பீட்டா் முகா்ஜிக்கு 2020-ஆம் ஆண்டிலேயே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது.

இந்திரா முகா்ஜிக்கு ஜாமீன் வழங்கும்போது நீதிபதிகள் கூறுகையில், ‘தனது முதல் கணவருக்குப் பிறந்த மகள் ஷீனா போராவும் மூன்றாவது கணவரின் மகன் ராகுல் முகா்ஜியும் ஒன்றாக வாழ்ந்ததால் அதிருப்திக்குள்ளான இந்திராணி, ஷீனா போராவைக் கொலை செய்யும் சதித் திட்டத்துடன் கடத்தியிருப்பது தெளிவாகிறது. இருப்பினும் வழக்கில் தொடா்புடைய சாட்சிகளிடம் விரைவில் விசாரண முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் இந்திராணிக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.