மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகார்: லாரி கவிழ்ந்து 8 பேர் பலி

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை குழாய்கள் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்ததில் 8 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :23 மே 2022, 5:43 am

பாட்னா: பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை குழாய்கள் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

சிலிகுரி-தில்லி தேசிய நெடுஞ்சாலை 57-ல் உள்ள ஜலால்கர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட காளி கோயில் அருகே அதிகாலை 3.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

பலியான 8 பேரும் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சில்லிகுரியில் இருந்து ஜம்மு & காஷ்மீர் செல்லும் வழியில் குழாய்கள் ஏற்றப்பட்ட சரக்கு லாரி  நான்கு வழிச்சாலையில் காளி கோயிலுக்கு வந்தபோது லாரி கவிழ்ந்தது. குழாய்கள் அவர்கள் மீது விழுந்ததில் 8 பேர் குழாய்களுக்கு அடியில் சிக்கி பலியாகினர்.

விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணியை துவக்கி, இறந்தவர்களின் உடல்களை மீட்கப்பட்டது. காயம் அடைந்தவர்களை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

விபத்திற்குப் பிறகு, ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.