குரங்கு அம்மை: மும்பை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை

குரங்கு அம்மை: மும்பை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை

பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருவதால், மும்பை விமான நிலையத்தில் பயணிகளை கண்காணித்து வருவதாக மும்பை மாநகராட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருவதால், மும்பை விமான நிலையத்தில் பயணிகளை கண்காணித்து வருவதாக மும்பை மாநகராட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா, பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மும்பை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், குரங்கு அம்மைக்கான அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த கஸ்தூரிபாய் மருத்துவமனையில் 28 படுக்கைகளை கொண்ட அறை தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com