அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஜம்மு-காஷ்மீரின், ராம்பன் மாவட்டத்தில் பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலைக்கு பள்ளிக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வளர்ச்சி ஆணையர் முஷ்ரத் இஸ்லாம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து மட்டங்களிலும் பற்றாக்குறை குறிப்பாக ராம்பனில் இந்நிலை மிகவும் கவலையளிக்கின்றது.
பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பக் கோரி, பரவலான போராட்டங்கள் நடைபெறுவது மாவட்டத்தில் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இனியும் தாமதிக்காமல் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு துணை ஆணையர் கோட்ட ஆணையரிடம் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



