நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விஸ்மயா தற்கொலை: கணவர் குற்றவாளி என தீர்ப்பு

கேரளத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News image

விஸ்வமயா தற்கொலை: கணவர் குற்றவாளி என தீர்ப்பு

Updated On :23 மே 2022, 11:56 am

DIN

கேரளத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரதட்சணை கொடுமை காரணமாக 23 வயது கல்லூரி இறுதியாண்டு மாணவி விஸ்மயா தற்கொலை செய்து கொண்டது கேரளத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுளள்து. கிரஷ்குமாருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

விஸ்மயா மீது கணவரின் வரதட்சணை துன்புறுத்தலே, அவரை தற்கொலை வரை இட்டுச் சென்றதாக புகார் கூறப்பட்டு, கணவரின் கொடுமைக்குள்ளான, விஸ்மயா அனுப்பியதாக சில புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து கேரளத்தில் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டங்கள் அதிகரித்தன.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்மயா. ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது, கிரண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

Story image

திருமணத்தின்போது 100 சவரன் நகை, டொயாட்டா கார், நிலம் என ஏராளமான வரதட்சணையை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். ஆனாலும் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டில் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது. வரதட்சணை கேட்டு கணவர் அடித்துத் துன்புறுத்தியதால், மன வேதனையில் இருந்த விஸ்மயா, கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்ததும், விஸ்மயாவின் பெற்றோர், காவல்நிலையத்தில் கிரண்குமார் மீது புகார் அளித்தனர். வழக்கை தீவிரமாக விசாரித்த காவல்துறையினர், வரதட்சணை கொடுமையால்தான் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக கிரண்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணை நிறைவடைந்து, இன்று விஸ்மயா தற்கொலையில் கணவர்தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.