தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நாட்டில் இதுவரை 192.67 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 192.67 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 மே 2022, 11:06 am

DIN

நாட்டில் இதுவரை 192.67 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

நாட்டில் இதுவரை மொத்தம்1,92,67,44,769 192.67 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 

12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் 3,31,70,120-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. மேலும் 1,48,11,899 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தியுள்ளன. 

18-44 வயதினருக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதல் டோஸ் 55,69,46,139 ஆகவும், இரண்டாவது டோஸ் 48,81,31,932 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,124 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,977 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,26,02,714 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14,971ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில்  0.03 சதவிகிதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.75 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 4,58,924  கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் (84,79,58,776) (84.79 கோடி) கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.