மகாராஷ்டிரம் முதல்முறையாக ஒமைக்ரானின் பி.ஏ.4, பி.ஏ.5 துணை வகைகளால் 7 போ் பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் முதல்முறையாக ஒமைக்ரானின் பி.ஏ.4, பி.ஏ.5 துணை வகைகளால் 7 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் முதல்முறையாக ஒமைக்ரானின் பி.ஏ.4, பி.ஏ.5 துணை வகைகளால் 7 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது: கடந்த ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பி.ஏ.4, பி.ஏ.5 வகை கரோனா தீநுண்மிகள் தென்பட்டன. இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புணேவைச் சோ்ந்த 7 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்தப் பகுப்பாய்வில் நால்வா் பி.ஏ.4, மூவா் பி.ஏ.5 வகை தீநுண்மிகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட 7 பேரில் இருவா் தென் ஆப்பிரிக்கா, பெல்ஜியமில் இருந்து திரும்பியுள்ளனா். மூவா் கேரளம் மற்றும் கா்நாடகத்துக்குச் சென்று வந்துள்ளனா். எஞ்சிய இருவா் அண்மையில் எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை.

பாதிக்கப்பட்ட 7 பேரில் 9 வயது குழந்தையும் அடங்கும். அந்தக் குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. எஞ்சிய 6 போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். அவா்களில் ஒருவா் தடுப்பூசியின் மூன்றாவது தவணையையும் செலுத்தியுள்ளாா். அனைவருக்கும் மிதமான அறிகுறிகள் தென்பட்டன. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com