தெலங்கானா அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் கட்சேகர் பகுதியில் நேற்று(ஞாயிறு) மாலை அரசியல் சார்பற்ற சமூக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தெலங்கானா தொழிலாளர் துறை அமைச்சர் மல்லா ரெட்டி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மல்லா ரெட்டி, முதல்வர் சந்திரசேகர் ராவைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் எழுந்து, அமைச்சரை கீழே இறங்கக் கூறி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும் உரையை முடித்ததும் அமைச்சர் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம்(கான்வாய்) மீது ஒரு குழுவினர், காலணி, கற்கள், நாற்காலிகளை வீசியுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் அந்த கும்பலைக் கட்டுப்படுத்தி அமைச்சரை பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
கட்கேசர் காவல்துறை ஆய்வாளர் சந்திர பாபு, 'இந்த சம்பவத்தில் இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. யாராவது புகார் கொடுக்க விரும்பினால், வழக்குப்பதிவு செய்வோம்' என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அங்கு நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எல்லை தாண்டிய எரிவாயு தட்டுப்பாடு!

கவலை வேண்டாம்..! பெட்ரோல், டீசல் கையிருப்பு அதிகமாக இருக்கிறது: இந்தியன் ஆயில்!
கடினமான சூழ்நிலைகளைச் சமாளிப்பதுதான் முக்கியம்: பிரதமர் மோடி

மார்ச் 16-ல் தமிழகம், கேரளம், மே.வங்கம் சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு?
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

