இந்தியாவில் இந்த ஆண்டு முன்னரே கணித்ததை விட அதிகளவு மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த பருவமழையில் சராசரி மழையின் அளவு 103 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் மிருத்யுஞ்சய மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ஏப்ரல் மாதத்தில் 99 சதவீதம் இயல்பான மழையை பெற்றுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்தாண்டு நல்ல மழைபொழிந்து வருகின்றது. மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவில் சராசரியாக 106 சதவீத மழையை எதிர்பார்க்கலாம். ஆனால், வடகிழக்குப் பகுதியில் இயல்பை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.
கேரளத்தில் மே 29 அன்று பருவமழை தொடங்கும் என்று ஐஎம்டி கணித்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்னதாக பருவமழை தொடங்கியது.
தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
இந்தாண்டு இயல்பை விட அதிகளவில் மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துப்பாக்கிகளை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை!

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள்கள் வேலை! 3 நாள்களுக்கு விடுமுறை!

கெளதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது : சஞ்சு சாம்சன்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

