சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மும்பை பள்ளியில் தீ விபத்து: 3 பேர் காயம்

மும்பை தாதர் பகுதியில் உள்ள பள்ளியின் சமையலறையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
கோப்புப்படம்
Updated On :2 நவம்பர் 2022, 6:55 am

DIN

மும்பை தாதர் பகுதியில் உள்ள பள்ளியின் சமையலறையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இன்று காலை 5.21 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. சமையலறையில் மின்சார வையரிங், சிலிண்டர், சமையல் பொருள்கள் மற்றும் துணிகள் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. 

மேலும், இரண்டாவது தளத்தின் மேற்கூரையின் சில பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் சியோன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

பொதுமக்கள் மின்சாரத்தைத் துண்டித்த பின்னர், சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு கருவிகள் மற்றும் இரண்டு மோட்டார் பம்புகளின் குழாய் மூலம் தீயை அணைத்தனர். 

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காயமடைந்து மூவரும் சிகிச்சை பெற்று வருவதாக சியோன் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.