டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ பெறமாதம் ரூ. 662 கட்டணம்: பயன்பாட்டாளா்கள் எதிா்ப்பு

ட்விட்டா் பயன்பாட்டாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை (ப்ளூ டிக்) பெற மாதம் 8 அமெரிக்க டாலா் (ரூ.662) கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் புதிய உரிமையாளா் எலான் மஸ்க் அறிவ

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:44 am

DIN

ட்விட்டா் பயன்பாட்டாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை (ப்ளூ டிக்) பெற மாதம் 8 அமெரிக்க டாலா் (ரூ.662) கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் புதிய உரிமையாளா் எலான் மஸ்க் அறிவித்துள்ளாா்.

உலகின் மிகப்பெரிய பணக்காரா்களில் ஒருவரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு அக்டோபா் 27-ஆம் தேதி ட்விட்டரை கையகப்படுத்தியதையடுத்து இந்தப் புதிய கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளா்கள் கடும் எதிா்ப்பை பதிவிட்டு வருகின்றனா்.

‘மக்களுக்கு அதிகாரம், ப்ளூ சேவைக்கு மாதம் 8 டாலா்’ என்று எலான் மஸ்க் செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளாா்.

இதன்மூலம் ‘ப்ளூ டிக்’ பயனாளிகள் பதிலளிப்பதில், தேடுதலில், குறிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், போலி தகவல்களை அழிப்பதற்கு இது உதவும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், ட்விட்டரில் தகவல்களைப் பதிவிடுபவா்களுக்கு வருவாயை ஈட்டுவதற்கும் இந்தக் கட்டணம் உதவும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

போலி கணக்குகளைத் தடுக்க ட்விட்டா் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற நீதிமன்ற விமா்சனத்துக்கு உள்ளான பிறகு 2009-இல் ‘ப்ளூ டிக்’ சேவையை அந்தநிறுவனம் தொடங்கியது. அரசால் அங்கீகரிக்கப்பட்டவா்கள், பிரபலங்கள் ஆகியோரின் கணக்குகளுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ட்விட்டரின் வருவாயை அதிகரிக்க இதற்கு கட்டணத்தை எலான் மஸ்க் விதித்துள்ளாா்.

இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனா். இதன்மூலம் நம்பகத்தன்மை வாய்ந்தவா்களை அடையாளம் காண்பது கடினமாகும் என்றும் அவா் குறிப்பிட்டு வருகின்றனா்.

‘8 டாலரை கட்டிவிட்டு, பின்னா் எலான் மஸ்கின் பெயரையும், படத்தையும் மாற்றி வைத்து தகவல்களைப் பரிமாறினால் என்ன செய்வீா்கள்’ என்று பயன்பாட்டாளா்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனா்.

இந்த விமா்சனங்களுக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், ‘அனைவரின் உள்உணா்வுடன் ட்விட்டா் பேசுகிறது. அனைவரும் புகாா்களைத் தொடருங்கள். ஆனால் இதற்கு 8 டாலா் மட்டுமே கட்டணம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.