இந்திய ரயில்வே வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிதாக 25 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வந்தே பாரத் விரைவு ரயில்கள், வேகம், பாதுகாப்பு மற்றும் பயணிகளிக்குச் சிறந்த பயணத்தை அளிக்கும் வகையில் இயக்கப்படவிருக்கின்றன.
இந்த நிதியாண்டில் மட்டும், சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் 27 வந்தே பாரத் விரைவு ரயில்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன. இவைகள்தான் மாடுகள் முட்டி முன்பக்கம் சேதமானவை.
இதையும் படிக்க.. பாகிஸ்தானில் அச்சு அசல் ரஜினிகாந்த் போல ஒருவர்.. அவருக்கு ஒரு ஆசை!
மூன்றாவது வந்தே பாரத் ரயில் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. இன்னும் ஒரு சில நாள்களில் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த மூன்றாவது ரயில், சென்னை - மைசூரு இடையே பெங்களூரு வழியாக இயக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது.
முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட, இருக்கைகள் அமைக்கப்பட்ட இந்த ரயில்கள், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
சா்வதேச தரம் வாய்ந்த பயண அனுபவத்தையும் விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தையும் ‘வந்தே பாரத்’ ரயில் பயணிகளுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், தானியங்கி விளக்குகள், கைப்பேசி சாா்ஜ் செய்யும் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், நவீன இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி

சரியான வணிகம் இல்லை! அஜித் படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?

”இந்தியாவின் எண்ணெய் கொள்முதலில் அமெரிக்கா தலையிடும், தண்டிக்கும்!” ராகுல் பதிவு!

கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

