10 லட்சத்தைக் கடந்த ஏா்டெல் 5ஜி வாடிக்கையாளா்கள்

தனது 5ஜி சேவைகளுக்கான வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளதாக இந்தியாவின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்களது 5ஜி சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. அந்த சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி 30 நாள்களுக்குள், 5ஜி கட்டமைப்பு இன்னமும் முழுமையாக நிறுவப்படாத நிலையிலேயே இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாகபுரி, வாராணசி ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை ஏா்டெல் நிறுவனம் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. தொடா்ந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் அந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com