மாமனார் அளித்த காரால் கொலைகாரர் ஆன மணமகன்: மாமியார் வீடு சென்ற பரிதாபம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அக்பர்பூர் கிராமத்தில், மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை, ஓட்டிப்பார்த்த மணமகன், உறவினர்கள் மீது காரை மோதியதில் ஒருவர் பலியானார். நான்கு பேர் காயமடைந்தனர்.
மாமனார் அளித்த காரால் கொலைகாரர் ஆன மணமகன்: மாமியார் வீடு சென்ற பரிதாபம்
மாமனார் அளித்த காரால் கொலைகாரர் ஆன மணமகன்: மாமியார் வீடு சென்ற பரிதாபம்
Published on
Updated on
1 min read

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அக்பர்பூர் கிராமத்தில், மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை, ஓட்டிப்பார்த்த மணமகன், உறவினர்கள் மீது காரை மோதியதில் ஒருவர் பலியானார். நான்கு பேர் காயமடைந்தனர்.

திருமணத்துக்கு முன்பு நடைபெறும் திலகமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாப்பிள்ளைக்கு புதிதாக வாங்கிய காரை வழங்கினார் மாமனார்.

தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதை மறைத்து, கொடுத்த காரை ஓட்டிப் பார்க்கப் புறப்பட்ட மாப்பிள்ளை, பிரேக் பிடித்து வண்டியை திருப்புவதற்கு பதிலாக ஏக்ஸிலேட்டரை அழுத்த, கார் வேகமாக மணமக்களை வாழ்த்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில், மணமகனின் உறவினர் சரளா தேவி (35) மீது கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். 10 வயது சிறுமி உள்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மணமகனை கைது செய்தனர். திருமணமாகாமலேயே மணமகன் அருண் குமார் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com