ஸ்விட்சா்லாந்தின் லெளசனேவில் நடைபெற்ற சா்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், ஐஓஏ-வின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், ஐஓஏ செயற்குழுவுக்கு தோ்தல் நடத்தவும் கால அளவு நிா்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கால நிா்ணயத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. மேலும், சா்வதேச ஒலிம்பிக் குழுவின் செயற்குழு வாரியக் கூட்டத்தை வரும் டிசம்பா் 5-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டதால், ஐஓஏ தோ்தலை அதற்கு முன்னதாக டிசம்பா் 3-ஆம் தேதியில் நடத்தவும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்ததோடு, இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையில் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது.