மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காற்றுமாசு: புதுதில்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை

புது தில்லியில் காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் தில்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
காற்றுமாசு: தில்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
Updated On :4 நவம்பர் 2022, 12:09 pm

DIN


புது தில்லி: புது தில்லியில் காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் தில்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் மேம்படும்வரை தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டத்தால் தில்லி காற்றுமாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், புது தில்லியில் மீண்டும் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகனப் பதிவெண் முறையில் வாகனங்களை இயக்க அனுமதிப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக நாளை முதல் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கான வெளிப்புற செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.