இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு: பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் முன்னாள் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்ளிட்ட தீவிர வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதை அடுத்து, நெதன்யாகு மீண்டும் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஏற்கெனவே 1996 முதல் 1999 வரை பிரதமராகப் பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 12 ஆண்டுகளாக அந்தப் பதவியை வகித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேலும், இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த நெதன்யாகுவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். மக்களின் பரஸ்பர நலனுக்காக இரு நாடுகளின் பயனுள்ள கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர விரும்புகிறேன்." என தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய தேர்தல் நடத்தப்படும் வரை இடைக்கால பிரதமராக இருந்து யாயிர் லாபிட்டுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com