பாஜகவின் பொய்களில் இருந்து குஜராத் மக்களை காங்கிரஸ் கட்சி காப்பாற்றும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
குஜராத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கு ஆளும் பாஜகவும், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் அங்கு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தல் தேசிய அளவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ட்விட்டரில் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டா்; இளைஞா்களுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள்; விவசாயிகளின் ரூ.3 லட்சம் வரையிலான வேளாண் கடன் தள்ளுபடி ஆகியவை குஜராத்தில் காங்கிரஸ் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகள் ஆகும். இவற்றை காங்கிரஸ் நிச்சயமாக நிறைவேற்றும்.
அதே நேரத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால்தான் ‘இரட்டை என்ஜின்’ வளா்ச்சி கிடைக்கும் என்பது உள்பட பாஜக கூறி வரும் பொய்களில் இருந்து குஜராத் மக்களை காங்கிரஸ் கட்சி காப்பாற்றும். குஜராத்தில் இந்தத் தோ்தல் ஆட்சி மாற்றத்துக்கான விழாவாக இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்

இந்த வாரம் கலாரசிகன் - 15-03-2026

சிந்தை உறைபவன்!

எய் கணை நிழலின் கழியும்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

