மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜோதிடருக்கே விபத்தா? அவரது கட்டங்களை ஆய்வு செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

வாருங்கள் அவரது கட்டங்களை ஆய்வு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.

News image

ஜோதிடருக்கே விபத்தா? அவரது கட்டங்களை ஆய்வு செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

Updated On :8 நவம்பர் 2022, 9:21 am


பலருக்கும் ஜோதிடம் சொல்லும் ஜோதிடருக்கே சாலை விபத்து நேரிட்டது குறித்து ஆச்சரியமாக இருக்கிறது. வாருங்கள் அவரது கட்டங்களை ஆய்வு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.

இந்த தகவல்தான் இன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

விபத்துக்கு நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு ஜோதிடருக்கே விபத்து நேரிட்டிருப்பது குறித்து அறிவது ஆச்சரியமாக உள்ளது. நாம் அவரது கட்டங்களை ஆய்வு செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சிலர் இதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும், சிலர் அவர் செய்யும் வேலையை வைத்து அவரை கிண்டல் செய்வதை எதிர்த்துள்ளனர்.

அதாவது, மருத்துவருக்கும் நோய் வரும், பொறியாளருக்கும் கட்டட சிக்கல் வரும், நீதிபதிகளுக்கும் நீதி கேட்கும் நாள் வரும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜோதிடர் யார் என்பது குறித்தோ, எப்போது நடந்த விபத்தில் நஷ்ட ஈடு கோரியுள்ளோர் என்பது போன்ற தகவல்களோ வெளிவரவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.