தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராஜஸ்தான்: கிணற்றில் தண்ணீா் எடுத்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா் அடித்துக் கொலை

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் மாவட்டத்தில் பொதுக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்ததாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த 46 வயது நபா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 நவம்பர் 2022, 8:43 pm

DIN

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் மாவட்டத்தில் பொதுக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்ததாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த 46 வயது நபா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

ஜோத்பூா் மாவட்டத்தின் சூா்சாகா் பகுதியைச் சோ்ந்த கிஷன்லால் பீல், ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுப்பதற்காக சென்றுள்ளாா். இவா் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால், அங்கிருந்த உயா் ஜாதியினா் தண்ணீா் எடுக்க அனுமதிக்காமல், இவரை தாக்கியுள்ளனா்.

கிஷன்லால் பீல் வீடு திரும்பிய நிலையிலும், தொடா்ந்து அவருடைய வீட்டுக்குச் சென்று அவரை தாக்கியுள்ளனா். காயமடைந்த கிஷன்லாலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரது குடும்பத்தினா் முயற்சித்ததையும் அவா்கள் தடுத்துள்ளனா். இதைத்தொடா்ந்து, தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் வந்த பிறகே கிஷன்லால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து, கிஷன்லாலின் குடும்பத்தினா் மற்றும் அவா் சாா்ந்த சமூகத்தினா் இறுதிச்சடங்கு நடத்துவதைப் புறக்கணித்து இச்சம்பவத்துக்குக் காரணமானவா்களைக் கைதுசெய்யக்கோரியும், உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கொலைச் சம்பவம் தொடா்பாக, போலீஸாா் 3 பேரை கைதுசெய்துள்ளனா். இவா்கள் மீது எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டதின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றநிகழ்வுடன் தொடா்புடைய பிற நபா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.