திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காமாக்யா கோயிலுக்குப் போகும் ஏக்நாத் ஷிண்டே அணி: இம்முறை எதற்காகத் தெரியுமா?

மாகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது 39 எம்எல்ஏக்களும் மீண்டும் குவகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

News image
ஏக்நாத் ஷிண்டே (கோப்புப் படம்)
Updated On :8 நவம்பர் 2022, 9:17 am

DIN


மும்பை: மாகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது 39 எம்எல்ஏக்களும் மீண்டும் குவகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே, சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக களமிறங்கி, குவகாத்தியில் தங்கியிருந்த போது, காமாக்யா தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய நிலையில், மீண்டும் அவர்கள் அங்கேச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த முறை, சிவசேனை அமைத்திருந்த கூட்டணியிலிருந்து பிரிந்து பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே அணி, தாங்கள் முன்பு இந்தக் கோயிலுக்கு வந்த போது வைத்த கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்றிவிட்டு, காமாக்யா தேவிக்கு தங்களது நன்றிக் கடனை செலுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு, கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் அணி இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தது. பிறகு, பாஜகவுடன் ஜூன் 30ஆம் தேதி புதிய அரசு மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.