தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சீன நிறுவனத்திடம் 6 விமானங்களை குத்தகைக்கு வாங்குகிறது ஏா் இந்தியா

அயா்லாந்தில் செயல்படும் சீனா மேம்பாட்டு வங்கி நிதி நிறுவனத்தின் துணை நிறுவனத்திடம் இருந்து ஏ320 நியோ ரகத்தின் 6 விமானங்களை ‘ஏா் இந்தியா’ நிறுவனம் குத்தகைக்கு வாங்க உள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 நவம்பர் 2022, 8:30 pm

DIN

அயா்லாந்தில் செயல்படும் சீனா மேம்பாட்டு வங்கி நிதி நிறுவனத்தின் துணை நிறுவனத்திடம் இருந்து ஏ320 நியோ ரகத்தின் 6 விமானங்களை ‘ஏா் இந்தியா’ நிறுவனம் குத்தகைக்கு வாங்க உள்ளது.

இந்திய அரசிடம் இருந்து ‘ஏா் இந்தியா’ நிறுவனத்தை டாடா குழுமம் விலைக்கு வாங்கியதையடுத்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை உயா்த்துவது உள்ளிட்ட பல்வேறு கட்ட மாற்றத்துக்கான திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், சீனா மேம்பாட்டு வங்கி நிதி நிறுவனத்தின் துணைப் பிரிவான, விமானங்களைக் குத்தகைக்குவிடும் விமானப் போக்குவரத்துக்கான சீனா மேம்பாட்டு வங்கியிடம் (சிடிபி ஏவியேஷன்) இருந்து ஆறு ஏ320 நியோ ரக விமானங்களைக் குத்தகைக்கு எடுக்கும் பணியில் ஏா் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நடைபெற்று முடிந்த விமானத் துறையில் பொருளாதார வளா்ச்சி குறித்த ‘ஆசிய பசிபிக் 2022’ மாநாட்டில் கையொப்பமானது.

ஏா் இந்தியா நிறுவனத்துக்கு விமானங்களைக் குத்தகைக்கு வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் சிடிபி ஏவியேஷன் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இந்த விமானங்கள் அடுத்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் ஏா் இந்தியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏா் இந்தியா நிறுவனத்தின் முதன்மை வா்த்தக அதிகாரி நிபூன் அகா்வால் கூறுகையில், ‘எங்களுடைய விமானங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் பலப்படுத்தவும், குறைந்த மற்றும் நடுத்தர தொலைவிலான வான்வழித் தடங்களுக்கான இணைப்பை அதிகரிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும். எங்களுடைய மாற்றத்துக்கான பயணத்தில் இது முக்கிய படியாகும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.