'காங்கிரஸ் நடைப்பயணத்தில் சரத் பவார் பங்கேற்கமாட்டார்'
ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்துகொள்ளமாட்டார் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தகவல் தெரிவித்துள்ளார்.


ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்துகொள்ளமாட்டார் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானாவைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் நடைபெறும் ஒற்றுமை நடைப்பயணத்தில் நாளை (நவ. 11) தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்துகொள்ளவிருப்பதாக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நேற்று கூறினார்.
இந்நிலையில், சரத் பவார் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் 3-4 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளல் அவர் நடைப்பயணத்தில் கலந்துகொள்ளமாட்டார் என்று அசோக் சவான் கூறியுள்ளார். மேலும் தானும் ராகுல் காந்தியும் சரத் பவாரிடம் போனில் நலம் விசாரித்ததாகவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், இன்று(நவ. 10) தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் பட்டீல், சுப்ரியா சுலேவும், நாளை(நவ.11) சிவசேனை கட்சியின் ஆதித்ய தாக்கரேவும் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிக்க | போதையில் பெண் நோயாளியை அறைந்த மருத்துவர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...