விசாகப்பட்டினம்: மாநிலங்களின் பிரிவினையின்போது உண்டான பிரச்னைகளுக்கு பெரிய இதயத்துடன் விரைவில் தீர்வு காண உதவி செய்யுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு இன்று வருகை தந்து, பல நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது தலைமையில் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அரசுடனும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்லிணக்கமாக செயல்பட்டு, மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெற்று வருகிறார்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, அரசியல் மற்றும் கட்சியையும் தாண்டியது நமது நட்பு. தனது ஒரே கொள்கை மாநிலத்தின் வளர்ச்சியே தான். வேறொன்றும் இல்லை. எனது மாநில மக்கள் மற்றும் மாநிலத்தின் நன்மை குறித்து மட்டுமே எனது கொள்கை அமைந்திருக்கும். இதைத் தவிர்த்து வேறு எந்தக் கொள்கைகளும் கிடையாது என்றார்.
மேலும், மாநிலத்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாகப் பிரித்த போது ஏற்பட்ட ஏற்பட்ட காயங்கள் (பிரச்னை) இன்னமும் ஆறாத வடுக்களாகவே உள்ளன. எனவே, பெரிய இதயத்துடன் அந்த பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிறப்பு அந்துஸ்து, விசாகப்பட்டினம் இரும்பாலை, ரயில்வே மண்டலம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


