இந்த மாநகரில் 5-ல் ஒருவர் நீரிழிவு நோயாளியாம்

மும்பையில் வாழும் 18 - 69 வயதுடையவர்களில் 18 சதவீதம் பேர் நீரிழிவு நோயுடன் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த மாநகரில் 5-ல் ஒருவர் நீரிழிவு நோயாளியாம்
இந்த மாநகரில் 5-ல் ஒருவர் நீரிழிவு நோயாளியாம்
Published on
Updated on
1 min read


மும்பையில் வாழும் 18 - 69 வயதுடையவர்களில் 18 சதவீதம் பேர் நீரிழிவு நோயுடன் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மும்பையின் 24 வார்டுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில், இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, மும்பை முழுவதும் உடனடியாக நீரிழிவு நோய தொடர்பான பரிசோதனைகளை நடத்திட முன்கூட்டியே கண்டறிந்து நோய் வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு கடந்த 2021ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன், மும்பை மாநகராட்சி இணைந்து நடத்தி, சுமார் 6,000 பேருக்கு, உணவுக்குப் பின் இருக்கும் ரத்த சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. அந்த ஆய்வில், 18 சதவீதம் பேருக்கு, உணவுக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருக்க வேண்டிய 70 - 99 ஐ விடவும் அதிகமாக அதாவது 126 எம்ஜி/டிஎல்-ஐக் காட்டிலும் அதிகமாக இருந்ததும், ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், 17 சதவீத பெண்களுக்கும், 18 சதவீத ஆண்களுக்கும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருந்தது தெரிய வந்தது.

மக்கள் நாள்தோறும் குறைந்தது 7000 அடிகள் நடக்க வேண்டும். 8 மணி நேரம் உறங்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். நீண்ட நடைப்பயிற்சி உங்களது வாழ்நாளில் 4 ஆண்டுகளை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com