நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் இப்படி ஒரு நிலை

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 474 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் ஒருவர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளார்.

News image

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் இப்படி ஒரு நிலை

Updated On :15 நவம்பர் 2022, 2:52 pm IST

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 474 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் ஒருவர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளார்.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 474 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு அதாவது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் பதிவாகும் மிகக் குறைவான கரோனா தொற்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,67,398 ஆக உள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,533 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,27,724ஆக பதிவாகியுள்ளது. அதேவேளையில், நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,918 ஆகக் குறைந்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.81 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.