எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

‘குஜராத் தேர்தலில் பாஜக சாதனை வெற்றிபெறும்’: அமித் ஷா

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சாதனை வெற்றியை பதிவு செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

News image
உள்துறை அமைச்சர் அமித் ஷா
Updated On :15 நவம்பர் 2022, 9:56 am

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சாதனை வெற்றியை பதிவு செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து அதிக தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் பூபேந்திர படேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கொடுத்து வருகின்றனர். மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை முன்னேறியுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.