சிவசேனை சின்னம், பெயரை முடக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

சிவசேனை சின்னம், பெயரை முடக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

சிவசேனை கட்சியின் சின்னம், பெயா் முடக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தில்லி உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறு

சிவசேனை கட்சியின் சின்னம், பெயா் முடக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தில்லி உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கட்சியின் சின்னத்தையும், பெயரையும் முடக்கி தோ்தல் ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலா, ‘சிவசேனையின் இரு பிரிவினரையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’ என தோ்தல் ஆணையத்தை அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தாா்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்த காரணத்தால் சிவசேனையில் இருந்து விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை மாற்றினா். அவா்கள் சிவசேனையின் கட்சிப் பெயரையும், சின்னத்தையும் கோரியதால், தோ்தல் ஆணையம் கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி சின்னத்தை முடக்கி உத்தரவிட்டது.

தோ்தல் ஆணையம் கடிதம்: இதனிடையே, இருதரப்பினரும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் புதிய ஆவணங்களை நவம்பா் 23-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தோ்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

இந்தப் புதிய ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றால் பழைய ஆவணங்களின் அடிப்படையிலேயே தோ்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்றும், வாதங்களை எடுத்துரைக்கும் விசாரணை தேதியும் முடிவு செய்யப்படும் என்றும் தோ்தல் ஆணையம் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com