தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: நிர்மலா சீதாராமன் உறுதி
தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.


தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.
தேசிய இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கான இரு நாள் மாநாடு தில்லி சூரஜ்குண்ட்டில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தீப்பெட்டி உற்பத்தித் தொழிலுக்கு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) 18 சதவீதமாக இருந்தது. இதைக் குறைக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்களும் முந்தைய அதிமுக அரசும் நிதியமைச்சரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வரி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இதையொட்டி, தேசிய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலக அளவில் நூறு தீப்பெட்டிகள் இருந்தால் அதில் 30 சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும். இந்தத் தொழிலில் உள்ள பிரச்னைகளுக்கு தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்து, தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து வித உதவிகளும் செய்யப்படும். பொதுவாழ்வில் இருக்கும் போது, அதுவும் நாம் பிறந்த மண்ணுக்கு செய்யும் எந்த செயல்களுக்கும் நன்றி என்பது தேவையில்லை. அதுபோன்ற எண்ண ஓட்டத்தில் நான் செயல்படுவதும் இல்லை என்றார் நிர்மலா சீதாராமன்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு பேசுகையில், "தீப்பெட்டி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாகக் குறைத்து, அந்த தொழிலுக்கு மத்திய அமைச்சர் புத்துயிர் அளித்துள்ளார்' என்றார்.
நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் பரமசிவம் வரவேற்றுப் பேசுகையில், "இந்திய தீப்பெட்டித் தொழிலுக்கு மற்றொரு சவாலாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள் வந்துள்ளன. சீனாவில் ரூ.5-க்கு கிடைக்கும் இந்த லைட்டர்கள் ஒரு ரூபாய் (ரூ.1) இன்வாய்ஸýடன் வரி ஏய்ப்புடன் இறக்குமதி செய்யப்படுவதோடு, ஒரு லைட்டர் 30 தீப்பெட்டிகளின் உற்பத்தியை அழித்துவிடும் நிலையை ஏற்படுத்துகிறது. இதற்குத் தடை விதிக்க மத்திய வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தொழில் துறை பிரிவு தலைவர் பி.கோவர்தனன், பாஜக மாநிலச் செயலாளர் சூர்யா போன்றோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...