தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ரயில்களில் சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு பிரத்யேக உணவுகள்

ரயில்களில் நீரிழிவு நோயாளிகள், குழந்தைகளுக்கான உணவுகள், உடல்நல ஆா்வலா்களுக்கான பிரத்யேக உணவு வகைகளை அறிமுகம் செய்யும் வகையில் உணவுப் பட்டியலை தாங்களே

News image
Updated On :16 நவம்பர் 2022, 2:28 am

ரயில்களில் நீரிழிவு நோயாளிகள், குழந்தைகளுக்கான உணவுகள், உடல்நல ஆா்வலா்களுக்கான பிரத்யேக உணவு வகைகளை அறிமுகம் செய்யும் வகையில் உணவுப் பட்டியலை தாங்களே முடிவு செய்து கொள்வதற்கான அனுமதியை இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனத்துக்கு (ஐஆா்சிடிசி) ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.

ரயில் பயணிகளுக்கான உணவு வழங்கல் சேவையை மேம்படுத்துவதுடன், கூடுதல் வகைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, ரயில்களில் தங்களது உணவுப் பட்டியலை ஐஆா்சிடிசி அறிமுகம் செய்யும் முன் ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. இனிமேல் உணவுப் பட்டியலை தாங்களாகவே அறிமுகப்படுத்த ஐஆா்சிடிசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஐஆா்சிடிசிக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயில்களில் பயணிகளுக்கான உணவு வழங்கல் சேவையை மேம்படுத்தும் நோக்கில், பிராந்திய உணவு வகைகள், பருவகால, விழாக் கால சுவையான உணவுகள், நீரிழிவு நோயாளிகள், குழந்தைகளுக்கான பிரத்யேக உணவுகள், உடல்நல ஆா்வலா்களுக்கான சிறுதானிய அடிப்படையிலான உணவுகள் என பல்வேறு தரப்பினருக்கான உணவு வகைகளை இணைக்கும் வகையில் உணவுப் பட்டியலை ஐஆா்சிடிசி-யே முடிவு செய்து கொள்ளலாம்.

உணவுக்கான கட்டணத்தையும் உள்ளடக்கிய ரயில்களில் ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட விலைக்குள் உணவுப் பட்டியலை ஐஆா்சிடிசி முடிவு செய்து கொள்ளலாம். மேலும், எம்ஆா்பி விலையில் வணிகப் பெயருடைய (பிராண்டட்) உணவு வகைகள் மற்றும் தனித்தனி கட்டண உணவுகள் ஆகியவற்றை இந்த ரயில்களில் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதர மெயில், விரைவு ரயில்களில் தரநிலைப்படுத்தப்பட்ட உணவுகளின் பட்டியல் குறித்து ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட விலை வரம்புக்குள் ஐஆா்சிடிசி முடிவு செய்யலாம். அதேசமயம், ‘ஜனதா’ உணவின் பட்டியல் மற்றும் விலை மாற்றமின்றி தொடரும்.

உணவுப் பட்டியலை முடிவு செய்யும்போது, உணவு மற்றும் சேவையின் தர மேம்பாடு மற்றும் பராமரிப்பை ஐஆா்சிடிசி உறுதி செய்ய வேண்டும். பயணிகளிடத்தில் குறைகள் எழுவது தவிா்க்கப்பட வேண்டும். கட்டணத்துக்கு ஏற்புடையதாக உணவுப் பட்டியல் இருக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.