செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

"உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் பயணங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை'

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணத்தில் முகக்கவசம் கட்டாயமில்லை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :16 நவம்பர் 2022, 9:37 pm

 நமது நிருபர்

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணத்தில் முகக்கவசம் கட்டாயமில்லை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
 கரோனா நோய்த் தொற்று வழிகாட்டி நெறிமுறைகளின்படி விமான பயணத்துக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அதுபோன்று அணியாதவர்கள் மீது நடவடிக்கையோ, அபராதமோ விதிக்க மத்திய சுகாதாரத்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.
 பயணத்திற்கு முன்பு விமானத்திற்குள் அதிகாரபூர்மாக இதுகுறித்து அறிவிக்கப்பட்டு, அணியாதவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் எனவும் கூறப்பட்டது.
 தற்போது மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்த வழிகாட்டி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்துள்ளதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 இது குறித்து சிவில் விமானப்போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் இநத அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. "நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகள் முகக்கவசம் அணிய விரும்புகிறோம்' என்கிற வார்த்தைகள் மட்டும் அறிவிப்பில் இருக்கும்.
 அதே சமயத்தில் முகக்கவசம் கட்டாயம் என்பது தொடர்பாக விமானத்தினுள் அறிவிக்கப்படாது.
 மேலும், முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் விமானத்திற்குள் அறிவிக்கப்படமாட்டாது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த அறிவிப்பால் விமானப் பயணத்துக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நிலை மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.