ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை: உத்தரவு வாபஸ்!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 நவம்பர் 2022, 7:55 am

DIN

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

வருடாந்திர மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால், பக்தா்களின் வருகை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 

இதற்காக கேரள அரசு சார்பிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்லவும், தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களும் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. 

இந்நிலையில் சபரிமலையில் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த அறிவுறுத்தல் தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாகக் கூறி இதனை கேரள அரசு வாபஸ் பெற்றுள்ளது. 

சபரிமலையில் 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புத்தகத்தில் தவறாக அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும் கேரள தேவசம் போர்டு அமைச்சர்  ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018ல் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.