6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மும்பையில் சாலை விபத்து: 5 பேர் பலி! 

மும்பை-புணே விரைவுச் சாலையில் பன்வேலில் கண்டெய்னர் லாரியின் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். 

News image
Updated On :18 நவம்பர் 2022, 7:06 am

DIN

மும்பை-புணே விரைவுச் சாலையில் பன்வேலில் கண்டெய்னர் லாரியின் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். 

பன்வேலில், ராய்காட்டின் கோபோலி பகுதியில் இந்த சம்பவம் இன்று காலை நடைபெற்றது. 

ஒன்பது பேருடன் வேகமாக வந்த கார் பின்னால் இருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மீதமுள்ள பயணிகள் பன்வேல், காமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார். 

கார் ஓட்டுநர் மீது கோபோலி காவல்நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காரை ஓட்டிச் சென்றவரின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.