அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜா? கொந்தளித்த நடிகை குஷ்பு

தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்! கொந்தளித்த நடிகை குஷ்பு
அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்! கொந்தளித்த நடிகை குஷ்பு
Published on
Updated on
1 min read


தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். 

குற்றம் செய்த தண்டனைக்காக சிறையில் அடைக்கப்பட்டால், அங்கு அவருக்கு நட்சத்திர விடுதியில் இருப்பவர்களை கவனிப்பதைப் போன்று வசதிகள் செய்து தரப்படுவதாக விமர்சித்தார். 

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் செய்யப்படும் விடியோ இணையத்தில் வைரலானது.

கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயினுக்கு விஐபி வசதிகள் செய்துகொடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து திகார் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், இந்த சம்பவத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்தவகையில் பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு, இந்த விடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், குற்றம் செய்த செயலுக்காக சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நட்சத்திர விடுதியின் கவனிப்பு அளிக்கப்படுகிறது. திகார் சிறையினுள் வரும் நபர், சத்யேந்தர் ஜெயினுக்கு தலையிலும், காலிலும் மசாஜ் செய்து செல்கிறார். அவருக்கு பாட்டிலில் குடிநீர்கள் மற்றும் படுக்கையறைகள் முதலியவை வழங்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com