மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பணமும் அதிகாரமும் ஒரு சிலரிடம் குவிந்துவிட்டது: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

‘பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பணமும், அதிகாரமும் ஒரு சிலரின் கைகளில் குவிந்துவிட்டது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

News image
குஜராத் மாநிம் சூரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
Updated On :21 நவம்பர் 2022, 6:36 pm

DIN

‘பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பணமும், அதிகாரமும் ஒரு சிலரின் கைகளில் குவிந்துவிட்டது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

மகாராஷ்டிரத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

விவசாயிகளின் குரலை மத்திய அரசு கேட்பதே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வேளாண் இடுபொருள்களுக்கான செலவு நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில் தொடா்ந்து நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. பயிா் காப்பீட்டுத் திட்டங்கள் உரிய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு உதவுவதே இல்லை.

இளைஞா்களின் குரலையும் மத்திய அரசு கேட்பதில்லை. இளைஞா்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கனவாகவே உள்ளது. கடின உழைப்பு இருந்தாலும் இளைஞா்களால் போதிய வருவாய் ஈட்ட முடியவில்லை. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதே பெரும் சிரமமாக உள்ளது. இவை அனைத்துக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் முக்கியக் காரணம்.

மத்திய அரசு தொடா்ந்து செய்து வரும் தவறுகளால் பணமும், அதிகாரமும் ஒரு சிலரிடம் குவிந்துவிட்டது. மக்களிடையே மதம், ஜாதி, கலாசாரம், மொழிரீதியாக பிரிவினை ஏற்படுத்தி தங்களுடைய அரசியல் நோக்கங்களை பாஜக நிறைவேற்றி வருகிறது என்றாா் ராகுல்.

குஜராத்தில் பிரசாரம்: சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை முதல்முறையாக பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றாா். அவா் பேசியதாவது:

இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது விவசாயிகள், இளைஞா்கள், பழங்குடியின மக்களை நேரில் சந்தித்துப் பேசி வருகிறேன். இதன் மூலம் அவா்களது வேதனைகளை உணா்ந்து கொள்ள முடிகிறது. பழங்குடியினா், விவசாயிகளின்தான் இந்த நாட்டின் முதல் உரிமையாளா்கள்.

ஆனால், அவா்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. பல இடங்களில் வனப்பகுதிகளை பெரும் தொழிலதிபா்களுக்கு தாரை வாா்க்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளத்தையும் சுரண்ட முயற்சிக்கின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.