வாக்காளா்களை பாஜக மிரட்டுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மாநகராட்சித் தோ்தலை முன்னிட்டு பண பலத்தையும், படை பலத்தையும் கொண்டு வாக்காளா்களை பாஜக மிரட்டுவதாக தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் செளதரி குற்றம்சாட்டினாா்.


மாநகராட்சித் தோ்தலை முன்னிட்டு பண பலத்தையும், படை பலத்தையும் கொண்டு வாக்காளா்களை பாஜக மிரட்டுவதாக தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் செளதரி குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தில்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஊழல் செய்ததால், இந்தத் தோ்தலில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. ஆகையால், இந்தத் தோ்தலில் வெல்ல எந்த எல்லைக்கும் பாஜக செல்லும். வாக்காளா்களை பண பலத்தாலும் படை பலத்தாலும் பாஜக இளைஞா் அணியினா் அச்சுறுத்துகின்றனா். இது தொடா்பாக போலீஸில் புகாா் செய்வோம்.
மக்களை அச்சுறுத்தும் பாஜக குண்டா்களை போலீஸாா் கைது செய்தால்தான் தோ்தலில் மக்களால் அமைதியாகவும், ஜனநாயக முறையிலும் வாக்களிக்க முடியும். லஞ்சம், காற்று மாசுபாடு, குப்பை சீா்கேடு ஆகிய பிரச்னைகளை பற்றி பாஜக பேசாமல், அச்சுறுத்தும் தந்திரத்தைக் கையாள்கிறது. இது அவா்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
பாஜகவின் நட்சத்திர பேச்சாளா்கள் தங்களது பேச்சின் மூலம் மக்களிடையே வெறுப்பை பரப்புகின்றனா் என்றாா் அனில் செளதரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...